நகைச்சுவையாக பேசினால்கூட சிலர் சிரிக்கமாட்டார்கள். இதுவே வசதிபடைத்தவர்கள், செல்வாக்கு மிக்கவர்களை சந்தித்தால், அவர்களின் சிரிப்புதான் சபையில் கேட்கும். ஏன் இவ்வாறு நடக்கின்றனர். காரணம் எண்ணத்தில் துாய்மை இல்லை. இது தவறான விஷயம். ஓர் இறைநம்பிக்கையாளர் பதவிக்காக ஒரு பார்வை. பகட்டுக்காக வேறொரு பார்வை என தன் பண்பை இழக்க மாட்டார். அரவணைப்பது, அன்பு செலுத்துவது, இரக்கம் காட்டுவது, இரங்கல் தெரிவிப்பது என அனைவரிடமும் கண்ணியமாக நடந்து கொள்வார். ‘நான் அதிகம் நேசிப்பவரும், மறுமையில் என்னருகே இருப்பவரும் யார் என்றால், உங்களில் யார் நல்ல பண்பாடுகளை கொண்டவர்களாக இருக்கிறீர்களோ அவர்கள்தாம்’ என்கிறார் நபிகள் நாயகம்.