பதிவு செய்த நாள்
25
மே
2023
03:05
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பெருமுடிவாக்கம் கிராமத்தில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில் ஆண்டு பிரம்மோற்சவம் இன்று காலை, 5:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. காலை 8:00 மணிக்கு உற்சவர் அம்மன் திருவீதியுலாவும், இரவு, 7:00 மணிக்கு, யாளி வாகனத்தில் உற்சவர் வலம் வந்து அருள்பாலிக்கிறார். நாளை, 25ம் தேதி காலை 8:00 மணிக்கு ஹம்ச வாகனத்திலும், இரவு, 7:00 மணிக்கு சிம்ம வாகனத்திலும், 26ம் தேதி காலை, 7:00 மணிக்கு கருடசேவையும், இரவு, 7:00 மணிக்கு சந்திர பிரபையிலும் உற்சவர் வலம் வருவர். வரும், 27ம் தேதி காலை, 8:00 மணிக்கு சூர்ய பிரபையிலும், இரவு சேஷ வாகனத்திலும் வலம் வருகின்றனர். மறுநாள் 28ம் தேதி காலை, 7:00 மணிக்கு நாச்சியார் திருக்கோலம், இரவு, ஹனுமந்த வாகனத்திலும், ரிஷப வாகனத்திலும் மற்றும் சந்திப்பு உற்சவம் நடக்கிறது. மேலும், 29ம் தேதி காலை, 7:00 மணிக்கு கற்பக விருட்ஷ வாகனம், இரவு, 7:00 மணிக்கு யானை வாகனம் உலா, 30ம் தேதி காலை, 7:00 மணிக்கு திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. ஜூன் 1ம் தேதி காலை, 8:00 மணிக்கு பல்லக்கு சேவை, இரவு, 7:00 மணிக்கு குதிரை வாகன உலா நடக்கிறது. 2ம் தேதி காலை, 8:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு, 3ம் தேதி திருக்கல்யாண உற்சவம், இரவு, 7:00 மணிக்கு புண்ணியகோடி விமானம் மற்றும் பட்டாபிஷேகத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.