ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, செங்கமடை கருப்பணசுவாமி, முனீஸ்வரர் கோயில், 45 ஆம் ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கருப்பண்ண சுவாமி, முனீஸ்வரர், காளியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து, பெண்கள் திருவிளக்கேற்றி பூஜை செய்து வழிபாடு செய்தனர்.