பதிவு செய்த நாள்
30
மே
2023
04:05
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் 17 நாள் வைகாசி பெருந்திருவிழா கடந்த மே.22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து அம்மன் யாழி, அன்னம், சிம்மம், குதிரை, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா புறப்பாடானது. தொடர்ந்து இவ்விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம், அக்னி சட்டி, கரும்பு தொட்டில் சுமந்தும், அலகு குத்தியும் ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் பூப்பல்லக்கில் அம்மன் வைகையாற்றில் எழுந்தருளினார். இதையடுத்து நாளை (மே.31) மாலை 4:00 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து ஜூன்.6ல் தேரோட்டம் நடைபெறும். இவ்விழாவில் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார், என்.சி.சி., மாணவர்கள், தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிர்வாக அலுவலர் இளமதி, பணியாளர்கள் பூபதி, கவிதா, சுபாஷிணி, பெருமாள் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.