பதிவு செய்த நாள்
30
மே
2023
04:05
மேட்டுப்பாளையம்: சிறுமுகையில் உள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில், மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.
சிறுமுகை பழத்தோட்டத்தில், பவானி ஆற்றின் கரையோரம், ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. கருவறை, விமானம், மகா மண்டபத்தில் பழுது நீக்கியும், புதிதாக மூன்று நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டது. கற்பக விநாயகர், அர்த்தநாரீஸ்வரர் ஆகிய சன்னதிகள் புதிதாக கட்டி முடித்து, கடந்த மாதம், 24ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதை அடுத்து, 48 நாட்கள் மண்டல பூஜை தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பாலசுப்பிரமணியர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேக பூஜையும் செய்து வருகின்றனர். இன்று 36ம் நாள் மண்டல பூஜை நடந்தது. காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியர் சுவாமி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஜூன் மாதம் 11ம் தேதி, 48வது நாட்கள் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை திருப்பணிகள் குழுவினர், கிருத்திகை வழிபாட்டு குழுவினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.