கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதனையொட்டி நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. அதேபோல் தென்கீரனூர் அண்ணாமலையார் கோவிலிலும், நீலமங்கலம் வன் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. சின்னசேலம் : தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வர் கோவிலில் நந்தீஸ்வரருக்கு 16 வகையான அபி ஷேகம் செய்யப்பட்டது. அருகம்புல், எருக்குமாலை மற்றும் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடந்தது. சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவில், கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில் மற்றும் அசலகுசலாம்பிகை பஞ்சாட்சர நாதர் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. சங்கராபுரம்: தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.