ஆழ்வார்குறிச்சி: கடையம் கைலாசநாதர்-பஞ்சகல்யாணி அம்பாள் கோயிலில் பக்தர்கள் உழவார பணிகளை மேற்கொண்டனர். கடையம் பஸ் ஸ்டாண்ட் அருகே கைலாசநாதர்-பஞ்சகல்யாணி அம்பாள் கோயில் உள்ளது. இங்கு பிரதோஷ நாளான நேற்று பெண் பக்தர்கள் கோயிலுள்ள பித்தளையிலான திருவாச்சி, மணி, விளக்கு உட்பட அனைத்து பொருட்களையும் மிகவும் நேர்த்தியான முறையில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பிரதோஷ நாட்களில் இந்த உழவார பணியை செய்து வரும் பக்தர்களை திருவாசகம் முற்றோதுதல் குழுவினர் மற்றும் கைலாசநாதர் பக்தர் குழுவினர் பாராட்டினர்.