பதிவு செய்த நாள்
02
ஜூன்
2023
04:06
சோழவந்தான்: விக்கிரமங்கலம் அருகே கோவில்பட்டியில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவனேசவல்லி சமேத மதுரோதைய ஈஸ்வரமுடையார் கோயிலில் பாலாலயம் நடந்தது. இக்கோயில் பழைமையான சிவப்பு நிற கிரானைட் கற்களாலானது. இக்கோயில் திருப்பணிகள் முடிந்து 1912ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு ஆன்மீகவாதிகளின் முயற்சியில் 111 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலின் புனரமைப்பு பணிகள் துவங்கியது. சிவாச்சாரியார் வீரபாகு கார்த்திக் தலைமையில் யாக பூஜைகள் செய்து, சுவாமிகளை மாற்று இடத்தில் பிரதிஷ்டை செய்து, அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இந்நிகழ்வில் ராமகிருஷ்ணா மடாதிபதி நியமானந்தா, சரக ஆய்வர் (பொ) தியாகராஜன், தக்கார் சுதா, கணக்கர் முரளிதரன், பூசாரி கருத்தப்பாண்டி ஆகியோர் பங்கேற்றனர். திருப்பணிக் குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், பழனிவேல், கண்ணன், முத்துராமலிங்கம், மகாமுனி, வீரசிங்கம், செல்வம், சாமி, பூர்வலிங்கம், தங்கதுரை, தனபாண்டி, காட்டுராஜா, சக்திவேல், ஜோதி, சிவா, அன்பு, ஜெகதீசன், பிச்சைமணி, பாண்டிகுமார் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.