Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணியில் கோலாகலமாக நடந்த ... மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோயிலில் பரத நாட்டிய நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னி ஹெத்தையம்மன் கோவிலில் குண்டம் இறங்கிய ஹெத்தைக்காரர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கன்னி ஹெத்தையம்மன் கோவிலில் குண்டம் இறங்கிய ஹெத்தைக்காரர்கள்

பதிவு செய்த நாள்

09 ஜன
2026
03:01

குன்னூர்; படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழாவின் ஒரு பகுதியாக, ஜெகதளா கிராமத்தில், விரதம் மேற்கொண்ட ஹெத்தைக்காரர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர்.


நீலகிரி மாவட்டத்தில், படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் டிச., ஜன., மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகை கொண்டாடுகின்றனர். பேரகனி, ஜெகதளா, ஒன்னதலை, பெத்துவா, தாவணெ, எப்பநாடு, கேத்தி, பந்துமை உள்ளிட்ட 14 கிராமங்களில் பாரம்பரிய திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கன்னி ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ள, ஜெகதளாவில் இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் துவங்கியது.  ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ்பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நடத்தும் திருவிழாவில், 48 நாட்கள் விரதம் மேற்கொண்ட, ஹெத்தைக்காரர்கள், கொதுமுடி கிராமம் வரை நடை பயணம் சென்று அருள்வாக்கு கூறினர்.


திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று காரக்கொரை மடிமனையில் குண்டம் திருவிழா நடந்தது. சிறப்பு பூஜைகள் நடத்தி கோவில் பூசாரி கும்பம் எடுத்து வர, பூசாரி உட்பட 11 ஹெத்தைக்காரர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர். குண்டம் இறங்கியவர்களின் காலில் மக்கள் விழுந்து ஆசி பெற்றனர். முக்கிய நிகழ்வாக காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி, வண்ண குடைகளுடன், பாரம்பரிய வெள்ளை உடை அணிந்த மக்கள் படுக நடனமாடியதுடன், பஜனைகளில் ஈடுபட்டனர். அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்றனர். பல ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  வரும் 12ம் தேதி மடியரை என அழைக்கப்படும் பாறை ஹெத்தை அம்மன் கோவிலில் இருந்து அம்மன் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து ஜெகதளா சுத்தக்கல் மற்றும் ஹெத்தையம்மன் கோவிலில் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கோவிலில் இருந்து பக்தியுடன் சேலை நெய்து அம்மனுக்கு சார்த்தப்படும். ஏற்பாடுகளை, ஆறூர் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar