உலக நன்மைக்காக சபரிமலையில் விளக்கு பூஜை செய்த ஐயப்ப பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2026 05:01
மானாமதுரை; மானாமதுரையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் உலக நன்மைக்காகவும் நோய் நொடியின்றி வாழ,விவசாயம் செழிக்க விளக்கு பூஜை செய்தனர்.
மானாமதுரை பஞ்சமுக ஆஞ்சநேயர் ஐயப்ப சேவா சங்கத்தினர் ஜன. 5ம் தேதி சோணையா கோயிலில் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்றனர். அங்கு சுவாமி தரிசனம் செய்த பிறகு சன்னிதானத்தில் உள்ள மண்டபத்தில் விளக்குகளை சிவலிங்க வடிவத்தில் அடுக்கி வைத்து உலக நன்மைக்காகவும்,நோய் நொடியின்றி வாழவும்,நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க விளக்கு பூஜை நடத்தி பஜனை செய்தனர்.