பழநியில் பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி திசாஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2026 12:01
பழநி: பழநி வீரதுர்க்கை அம்மன் கோயிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு திசா யாக பூஜை நடைபெற்றது. பழநி கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. பத்தர்களின் பாதுகாப்பு, நலன் வேண்டி வடக்கு கிரிவீதியில் உள்ள வீரதுர்க்கை அம்மன் கோயிலில் கும்ப கலசங்கள் வைத்து திசாஹோமம் நடைபெற்றது. கலசநீரில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.