உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே மானூத்து பெத்தனசுவாமி கோயில் பெருங்கும்பிடு கிடா வெட்டு திருவிழா 35 ஆண்டுகளுக்குப்பின் நடைபெற்றது. நேற்று இரவு பேச்சியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கருங்கிடாய், பன்றி பலி கொடுத்து ஆகாச பூஜை, சேவல் கழுவேற்றல் நிகழ்ச்சியும், தொடர்ந்து அதிகாலையில் பூசாரிகள் பொங்கல் வைத்து கிடா வெட்டி வழிபாடு நடந்த பின் பக்தர்களும் பொங்கல் வைத்து கிடா வெட்டி வழிபாடு நடத்தினர். மதுரை, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.