பதிவு செய்த நாள்
03
ஜூன்
2023
11:06
தஞ்சாவூர்,– ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், காயமடைந்தோர் குணமடையவும் வேண்டி, கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில், பிரளயகாலருதிரர் சன்னத்தியில், இந்து மகா சபாவினர் கையில் விளக்கேற்றி வழிபட்டனர்.
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில், இறநத்வர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும். காயமடைந்தோர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். இனியும் மரணம் தொடரக்கூடாது என்பதற்காக, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் உள்ள பிரளயகாலருதிரர் சன்னதியில், ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம நிரஞ்சன், மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜன், ஆலய பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கையில் அகல் விளக்கை ஏற்றி, வழிபட்டனர். இது குறித்து ராமநிரஞ்சன் கூறியதாவது; பிரளயகாலருதிரரை, எமகண்டத்தில் அபிஷேகம் செய்து வழிபட்டால், சத்துரு உபவாதைகளும், ஆயுள் விருத்தியும், வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால், ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் எந்த வியாதியும் இல்லாமல் நலம் பெற வேண்டும். இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என வழிபாடு நடத்தப்பட்டது இவ்வாறு அவர் தெரிவித்தார்.