கிரிவலம் வருபவர்கள் வேகமாக நடந்தோ அல்லது ஓடியோ செல்வது சரியானதா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2012 02:09
இறைவனுடைய திருநாமத்தை உச்சரித்துக் கொண்டு அடிமேல் அடிவைத்து நடப்பது தான் பிரதக்ஷிணம் (வலம் வருதல் )என்று கூறப்படுகிறது. இது பொதுவான விதி. ஆலயம் வலம் வருவதற்குப் பொருந்துவது. திருவண்ணாமலை கிரிவலப்பாதை 18 கி.மீ., சுற்றளவு உடையதாக இருக்கிறது. சிலருக்கு நீண்டநேரம் நடப்பதை விட வேகமாகச் சென்றால் களைப்பு தெரிவதில்லை. கிரிவலப்பாதையின் தூரத்தை அனுசரித்து வேகமாக நடந்து செல்வதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் சிலர் பிறருக்கு இடையூறாக தள்ளுமுள்ளு செய்கிறார்கள். இதனைத் தவிர்க்க வேண்டும்.