சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலுக்கு, 850 கிராம் எடையிலான தங்க சடாரி நன்கொடையாக வழங்கப்பட உள்ளது. பெருமாள் கோவில்களில் மூலவரை தரிசித்த பக்தர்களின் தலையில் சடாரி வைப்பது வழக்கம். பார்ப்பதற்கு கிரீடம்போல் இருக்கும் சடாரி என்பது ஒரு பீடத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் பகவானின் பாதங்களையே குறிக்கும். இறைவனின் முன்னே அனைவரும் ஒன்றே என்ற தத்துவத்தை நமக்கு உணர்த்தவே, இப்படி சடாரி வைக்கப்படுகிறது. அந்தவரிசையில், பிரசித்தி பெற்ற சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், தங்கத்தாலான சடாரி ஒன்றை, நன்கொடையாக செல்லானி ஜுவல்லரி மார்ட் என்ற தங்க நகைக்கடை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. 850 கிராம் எடை கொண்டு இந்த சடாரி, ஜூன் 9ம் தேதி பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.