பதிவு செய்த நாள்
07
ஜூன்
2023
01:06
திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலின் உபகோயிலான மகேந்திரகிரிநாதர் (சிவன்) கோயில் கும்பாபிஷேகத்தைமுன்னிட்டு நேற்று யாகசாலை பூஜைகள் துவங்கின. ராமானுஜஜீயர் ஆசியுடன் நேற்று காலை கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், கோபூஜை நடந்தது. மாலை நரசிம்ம தீர்த்தத்திலிருந்து புனித நீர் எடுத்து மாட வீதிகளை சுற்றி வலம் வந்து, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி பூஜைகள் கும்பஅலங்காரம் நடந்தது. தொடர்ந்து முதற்கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. இன்று (7ம் தேதி) காலை விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, தீபாராதனை, மாலை விக்னேஸ்வர பூஜை, மூன்றாம் காலயாகசாலை பூஜை, இரவில் பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. நாளை (8ம் தேதி) காலை நான்காம் காலயாக சாலை பூஜை, தீபாராதனை கடம் எழுந்தருளல் நடக்கிறது. காலை 9 மணிக்கு மேல்10 மணிக்குள் மகேந்திரகிரிநாதர் கோயில் விமான கோபுரங்கள், மூலஸ்தானம், மற்றும் பரிவார மூர்த்தி களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. யாகசாலை பூஜை நேரங்களில் வேத பாராயணம் மற்றும் திருமுறை பாராயணம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஜீயர்மடம் பவர்ஏஜன்ட் பரமசிவன் தலைமையில் ஜீயர்மடம் ஊழியர்கள் செய்துள்ளனர்.