சோழவந்தான்; சோழவந்தான் அருகே தென்கரையில் உள்ள உச்சிமாகாளியம்மன் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த மே.30ல் செவ்வாய் சாற்றி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மன் அன்னம், ரிஷபம், யானை, நந்தி உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடந்தது. இதையடுத்து நேற்று வைகையாற்றில் இருந்து பூஜாரி சக்தி தலைமையில் சக்தி கரகம் சுமந்து ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இன்று (ஜூன்.7) காலை பால்குடம், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வும், பூப்பல்லக்கு விழாவும் நடைபெறும். கிராமத்தினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.