திருவண்ணாமலை திரௌபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2023 02:06
திருவண்ணாமலை திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை , மாடவீதி பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் இன்று யாகசாலை பூஜை, கால பூஜை, பூர்ணாஹூதி நடத்தப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து விமான கலசத்திற்கு புனித நீரை ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.