காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனித்திருவிழாவையொட்டி இன்று பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு தனி கோவில் உள்ளது.இங்கு காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும். மாங்கனி திருவிழா நடக்கிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர் மேலும் இவ்வாண்டு வரும் 30தேதி மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது. வரும் ஜூலை.1ம் தேதி காரைக்கால் அம்மையார். பரமதத்தர் திருகல்யாணம் சிறப்பாக நடைபெறுகிறது. மறுநாள் 2ம் தேதி சிவபெருமாள் பிச்சாண்டவ மூர்த்தியாக வீதி உலா நடைபெறுகிறது. அப்போது பக்தர்கள் மாங்கனி வீசும் நிகழ்ச்சி நடைபெறும். பிரசித்தி பெற்ற இத்திருவிழா தொடர்ந்து 30 நாட்கள் மிகவிமர்ச்சியாக நடைபெறும். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பந்தகால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் வாரிய தலைவர் வெற்றிச்செல்வம் துணைத்தலைவர். புகழேந்தி, செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம். உறுப்பினர் ஜெயபாரதி உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு அம்மையாரை தரிசனம் மேற்கொண்டனர்.