தேவகோட்டை, : தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தான நிர்வாகத்தில் உள்ள குங்கும காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நேற்று இரவு 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காளியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தன. கொடியேற்றத்தை தொடர்ந்து கொடிமரத்திற்கும், அம்மனுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. சந்திரசேகர குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜை நடத்தினர்.