சங்கரன்கோவில் திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2023 02:06
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் திரவுபதி அம்மன் கோயிலில் நேற்று பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். சங்கரன்கோவில் சங்கர்நகர் 2ம் தெருவில் செங்குந்தர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டதிரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக்கோயிலில் ஆண்டுதோறும் பூக்குழி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பூக்குழி திருவிழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை9 மணிக்கு சக்தி நிறுத்துதல், அக்னி வளர்த்தல் நிகழ்ச்சியும், மாலை 6:30 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இன்று (10ம் தேதி) மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், நாளை (11ம் தேதி) ஊஞ்சல் மற்றும் அன்னதானம் நடக்கிறது. 13ம் தேதி பால்குடம் மற்றும் அம்மன் படைப்பு நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியில் செங்குந்தர் அபிவிருத்தி சங்கதலைவர் சங்கரசுப்பிரமணியன், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் குருநாதன், நகராட்சி தலைவி உமாமகேஸ்வரி உட்படபலர் கலந்து கொண்டனர்.