சிறுவயலில் மழை வேண்டி, விவசாயம் செலுத்திட புரவி எடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2023 10:06
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரண்மனை சிறுவயலில் மழை வேண்டியும், விவசாயம் செழித்திடவும் சார்பில் புரவி எடுப்பு விழா நடந்தது.
தமிழகத்தில், கிராமங்களின் காவல் தெய்வமாக வணங்கப்படும் அய்யனாரின் வாகனமாக குதிரைகள் உள்ளன. இந்த குதிரைகளுக்கு, மரியாதை செலுத்தும் விதமாகவும், மழை வேண்டியும், விவசாயம் செழித்திடவும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுக்கு ஒரு முறை புரவி எடுப்பு விழா நடைபெறுவது வழக்கம். இதில், கிராம மக்கள் திருமணம் மற்றும் குழந்தை வரம் வேண்டியும் சிலைகளை தூக்கிச் சென்று நேர்த்திக்கடன் செலுத்துவர். காரைக்குடி அருகேயுள்ள அரண்மனை சிறுவயலில் களத்திருடைய ஐயனார் கோயில் புரவி எடுப்பு விழா நடந்தது. குதிரை பொட்டலில் 2 பெரிய குதிரை 1 நடு குதிரை, 50 க்கும் மேற்பட்ட சிறிய குதிரை மற்றும் காளை சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கிராம மக்கள் புரவிகளை ந கி.மீ., தூக்கிச் சென்று ஐயனார் கோயிலில் செலுத்தினர். சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.