மானாமதுரை: மானாமதுரை சங்கு விநாயகர் கோயில் வைகாசி உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை சங்கு விநாயகர் கோயில் வைகாசி உற்சவ விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா நாட்களின் போது தினந்தோறும் சங்கு விநாயகருக்கும் கோவிலில் உள்ள பொன்னர் சங்கர் சுவாமி உட்பட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றிலிருந்து பால்குடம், அழகு குத்துதல் வேல்குத்துதல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றினர். இதனைத் தொடர்ந்து கற்பூர சுந்தர சுவாமி சன்னதியில் ஆடு, கோழி,முட்டை போன்ற அசைவ உணவுகளை சமைத்து படையல் போட்டிருந்தனர். பின்னர் இரவு முழுவதும் சுவாமியாடிகள் சாமியாட்டம் ஆடி பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினர். இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் ஆடு கோழிகளை பலியிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.விழாவில் மதுரை, மானாமதுரை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான கோவில் குடிமக்கள் கலந்து கொண்டனர்.