சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2023 04:06
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. இக்கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 1ம் தேதி நடைபெற்றது. வைகாசி திருவிழா துவங்க உள்ளதால் முன்கூட்டியே மண்டல பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்று மண்டல பூஜை நடந்தது. காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. சைவமும், வைணவமும் சங்கமிப்பதை குறிக்கும் பொருட்டு 1008 சங்குகளால் நாமம், ஓம், சிவலிங்கம் ஆகிய வடிவில் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து காலை 9:00 மணிக்கு பூரணை புட்கலை உடனாகிய சேவுகப்பெருமாள் அய்யனார், சிங்கம்பிடாரி அம்மன், பூவை வல்லி சமேத சுயபிரகாசீஸ்வரர், விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தது. விழாவில் திருப்பணிக்குழு தலைவர் ராம.அருணகிரி, கோயில் கண்காணிப்பாளர் தன்னாயிரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஐயப்ப பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.