தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷ வழிபாடு: நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2023 05:06
தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரியகோவிலில் வைகாசி பிரதோஷத்தை முன்னிட்டு, மகா நந்தியம்பெருமானுக்கு குடம், குடமாக அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெறும். இன்று வைகாசி பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், திரவியப்பொடி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பிரதோஷ வழிபாட்டில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.