ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே பனிக்கோட்டை காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான வருடாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக வருடாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகளும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. தொடர்ந்து அய்யனார், கருப்பண்ண சுவாமி, மாரியம்மன், துர்க்கை விநாயகர் ஆகிய தெய்வங்களுக்கும் வருடாபிஷேக விழா நடைபெற்றது. நடைபெற்ற வருடாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.