தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2023 05:06
தேவிபட்டினம்: தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் குழந்தை பாக்கியம், திருமண தடை உள்ளிட்ட பல்வேறு தோஷ நிவர்த்திகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் நவபாஷாணத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பள்ளி கோடை விடுமுறை நாட்கள் என்பதால், விடுமுறை நாட்களில் தினமும் ஏராளமான பக்தர்கள் நவபாஷானத்திற்கு வந்து சென்றனர். இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையிலும், இன்று வழக்கம்போல் பக்தர்களின் வருகை இருந்தது. வெயில் நேரங்களில் மட்டுமே, பக்தர்கள் வருகை சற்று குறைந்து காணப்பட்டு, காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகப்படியான பக்தர்கள் நவபாஷாணத்துக்கு வருகை தந்து தரிசனம் பெற்று சென்றனர்.