சந்தன மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா; தீர்த்தவாரி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2023 04:06
கமுதி: கமுதி அருகே ராமசாமிபட்டி கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த ஜூன் 6ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. பின்பு பால்குடம் , அக்கினி சட்டி,பூக்குழி விளக்கு பூஜை, பொங்கல் வைத்தல், கிடா வெட்டி நேர்த்திகடன் செலுத்தினர். 9ம் நாள் நிகழ்ச்சியாக கோயில் முன்பு பக்தர்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்பு திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பின்பு சந்தன மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை பொன்னூஞ்சல் நடந்தது. மாலை கிராமத்தின் முக்கிய வீதியில் கிராமமக்கள் முளைப்பாரி தூக்கி ஊர்வலமாக சென்றனர்.ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .விழாவில் கமுதியை சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.