அன்னூர்: சாலையூரில் இன்று மாலை வள்ளி கும்மி அரங்கேற்றம் நடக்கிறது. அன்னூர் அருகே சாலையூரில், சித்தர்கள் வழிபட்ட, ஆயிரம் ஆண்டுகள் பழமையான பழனியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த பிப். 1ம் தேதி நடந்தது. இக்கோவிலில் ஸ்ரீ வள்ளி முருகன் கலைக்குழு சார்பில், சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்களுக்கு கும்மியாட்ட பயிற்சி கடந்த மூன்று மாதங்களாக அளிக்கப்பட்டது. இதையடுத்து அரங்கேற்ற நிகழ்ச்சி இன்று மாலை 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று கண்டு களிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.