பதிவு செய்த நாள்
17
ஜூன்
2023
11:06
சென்னை: திருமலை, திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், ஆக., - செப்., மாதங்களில், சில சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை, செப்., மாதத்திற்கான டிக்கெட், எலக்ட்ரானிக் டிப் வாயிலாக முன்பதிவு, நாளை மறுதினம் காலை 10:00 மணி முதல், 21ம் தேதி காலை 10:00 மணி வரை நடக்கிறது. திருமலையில் பவித்ர உற்சவம் ஆக., 27 முதல் 29ம் தேதி வரை நடத்தப்படுகிறது. அதற்கான முன்பதிவு, 22ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. ஆர்ஜித சேவைகளான கல்யாணம், ஊஞ்சல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, செப்., மாதத்திற்கு, 22ம் தேதி காலை 10:00 மணிக்கு முன்பதிவு நடக்கிறது. வீட்டில் இருந்தபடியே, ஆன்-லைன் வாயிலாக செப்., மாதம் தரிசிக்கும் சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றுக்கான முன்பதிவு, 22ம் தேதி மாலை 3:00 மணிக்கு துவங்குகிறது. வரும் செப்., மாதத்திற்கான அங்க பிரதக்ஷன டோக்கன், 23ம் தேதி காலை 10:00 மணிக்கு முன்பதிவு துவங்குகிறது.