ஜனநாயகன் படத்திற்கு தடை நீங்க பிள்ளையார்பட்டியில் ஆனந்த் பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2026 11:01
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டியில் விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கான சென்சார் தடை நீங்க வேண்டி த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சாமி தரிசனம் செய்தார்.
நேற்று மாலை 6:00 மணி அளவில் பிள்ளையார்பட்டி வந்த புஸ்ஸி ஆனந்த் கற்பகவிநாயகர் கோயிலில் மூலவர் விநாயகரை தரிசனம செய்தார். தொடர்ந்து பிரகாரம் வலம் வந்து சிவன் சன்னதி அருகில் உள்ள தலவிருட்சமான மருத மரத்திற்கு ‛ ஜன நாயகன்’ பட போஸ்டரை சமர்ப்பித்து அப்படத்திற்கு சென்சார் அனுமதி விரைவாக வழங்க வேண்டி பிரார்த்தித்தார். தொடர்ந்து கோயிலுக்கு வெளியே வந்து கோயில் தெற்கு கோபுரத்திற்கு முன்பாக 108 சிதறு தேங்காய் உடைத்தார். பின்னர் பக்தர்கள் அளித்த விநாயகர் படத்தை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து காரில் புதிய கொடியை மாற்றி புறப்பட்டார். முன்னதாக சி.பி.ஐ. விசாரணைக்கு சம்மன் அனுப்பியிருந்த போதும் நவ.8 ல் பிள்ளையார்பட்டிக்கு ஆனந்த் வந்த சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.