பதிவு செய்த நாள்
17
ஜூன்
2023
04:06
திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், ஆனி அமாவாசையை முன்னிட்டு தெப்போற்சவம் இன்று துவங்குகிறது. திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். இன்று அமாவாசையை முன்னிட்டு, உற்சவர் வீரராகவர், முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இன்று மாலை, 6:00 மணியளவில், முதல் நாள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இந்த உற்சவம், நாளை மறுதினம் வரை, தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும். இந்த நாட்களில், ஹிருதாபநாசினி குளத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் தெப்பத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவர் எழுந்தருளி, மும்முறை தெப்பத்தில் வலம் வருவார். இதற்கான ஏற்பாடுகளை வீரராகவர் கோவில் தேவஸ்தானம் செய்து வருகிறது.