பதிவு செய்த நாள்
22
ஜூன்
2023
12:06
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், அடுத்த ஆண்டு ஜனவரி 24ம் தேதி திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கோவில் கட்டுமான குழுத்தலைவர் நிரூபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2020 ஆக., 5ல் அடிக்கல் நாட்டி துவக்கினார். 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், மூன்று தளங்களாக அமைக்கப்படுகிறது. கோயிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நுாலகம், மகரிஷி, வால்மிகி ஆராய்ச்சி நிலையம் மூலவர் மண்டபம் உட்பட 6 மண்டபங்கள் அமைய உள்ளன. மூலவர் கோபுரத்தின் உயரம் 161 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 2024 ஜன., 14ல், ராமர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின் கோவில் முறைப்படி பக்தர்களுக்காக திறக்கப்படும் அறிவிக்கப்பட்டு்ள்ளதையடுத்து பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது.
ராமர் கோவில், அடுத்த ஆண்டு ஜனவரி 24ம் தேதி திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கோவில் கட்டுமான குழுத்தலைவர் நிரூபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அயோத்தியில் அவர் நிருபர்களிடம் கூறி இருப்பதாவது:- மூன்று அடுக்கு கொண்ட ராமர் கோவிலின் தரைத்தள கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி மகர சங்கராந்தி அன்று கோவிலில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான பணிகளைத் தொடங்க கோவில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. ஜனவரி 14 முதல் 24ம் தேதி வரை சிலை பிரதிஷ்டைக்கான 10 நாள் சடங்கு நடைபெறுகிறது. சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின் ஜனவரி 24ல் கோவில் முறைப்படி பக்தர்களுக்காக திறக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.