காரைக்கால் மாங்கனி திருவிழா பந்தல் அமைக்கு பணி திவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2023 03:06
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் வரும் 2ம் தேதி மாங்கனி திருவிழாவை முன்னிட்டு பந்தல் அமைக்கு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் 63 நாயன்மார்களின் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு தனிக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் அம்மையாரின் கணவனிடம் சிவபெருமாள் மங்களி கொடுத்து அனுப்பி.அதை அடியார் வேடத்தில் சிவபெருமான் வந்து சாப்பிடுவதும். இதனால் காரைக்கால் அம்மையாரை பிரிந்து அவரது கணவர் வெளியூர் செல்வதும் அம்மையார் இறைவனை காண கயிலாயத்திற்கு தலைகீழாக கைலலால் நடந்து செல்வதையும் சித்தரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா மிகவிமர்ச்சியாக நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு வரும் 30ம்தேதி மாப்பிள்ளை அழைப்பு, மறுநாள் ஜூலை 1ம் தேதி காரைக்கால் அம்மையார்.பரமதத்தர் திருகல்யாணம்.மாலை வெள்ளை சாத்தி புறப்பாடு, 2ம் தேதி சிவபெருமாள் பிச்சாண்டவ மூர்த்தியாக வீதி உலா வரும்போது பக்தர்கள் மாங்களி வீசும் நிகழ்ச்சி நடக்கும். மாலை அமுது படையல் உ ள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.இத்திருவிழா தொடர்ந்து 30நாட்கள் நடைபெறும். 1மாதம் நடைபெறும் மாங்கனி திருவிழா நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை தடுக்கப்பட்டு வாகனங்களை திருப்பிவிடப்படும் சாலையின் இருபக்கத்தில் கடைகள் மற்றும் பந்தல் அமைக்குபணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மாங்கனி திருவிழா அனைத்து ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றனர்.