பதிவு செய்த நாள்
26
ஜூன்
2023
10:06
திருப்பூர்; ஆனி உத்திரமான நேற்று, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் கனகசபை மண்டபத்தில், ஸ்ரீநடராஜர் - ஸ்ரீசிவகாமியம்மனுக்கு மகா அபிேஷகம் நடைபெற்றது.
சிவாலயங்களில் உள்ள, ஸ்ரீநடராஜர் - சிவகாமியம்மனுக்கு, ஆண்டுக்கு ஆறு முறை அபிேஷக பூஜைகள் நடக்கின்றன. சித்திரை -திருவோணம், ஆனி - உத்திரம், மார்கழி - திருவாதிரை நட்சத்திர நாட்கள்; ஆவணி, புரட்டாசி, மாசி மாதம் வரும் சதுர்த்தசி நாட்களில், மகா அபிேஷகம் நடக்கிறது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில், நேற்று ஆனி திருமஞ்சனம் மகா அபிேஷக பூஜைகள் நடந்தன. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி - விசாலாட்சி அம்மன் கோவில், அலகுமலை ஸ்ரீகைலாசநாதர் -பிரஹன்நாயகி கோவில், பெரியபாளையம் ஸ்ரீசுக்ரீஸ்வரர் -ஆவுடைநாயகிகோவில், ஊத்துக்குளி ரோடு காசி விஸ்வநாதர் - விசாலாட்சியம்மன் கோவில், சாமளாபுரம் ஸ்ரீசோழீஸ்வரர் -தில்லைநாயகி அம்மன் கோவில் என, அனைத்து சிவாலயங்களிலும், ஆனி திருமஞ்சனம் நடந்தது. ஸ்ரீநடராஜர் -சிவகாமியம்மன் உற்சவர்களுக்கு, கனகசபை மண்டபத்தில், 16 வகை திரவியங்களால் அபிேஷக பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து, மலர்மாலைகள், வில்வமாலைகளை சூடி, சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்களும், சிவனடியார்களும், சிவபுராணம், திருத்தொண்டத்தொகை மற்றும் திருவாசக பதிகங்களை, பண்ணிசையுடன் பாராயணம் செய்து வழிபட்டனர். திருப்பூர் பூச்சக்காடு, செல்வ விநாயகர் கோவிலில், மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு ேஹாமம், 108 சங்காபிேஷகம் மற்றும் அபிேஷக பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய, சுவாமிகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.