அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 13 நாட்கள் நடக்கும் விழாவில் சொக்கநாதர், மீனாட்சி ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். நேற்று மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். தேரோடும் வீதிகள் வழியாக சுவாமி - அம்மன் ஊர்வலமாக வருவர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.