பவித்திர சதுர்தசி: சித்தலிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2023 11:07
கோவை : இன்று பவித்திர சதுர்தசியை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் ஃபேஸ் - 2ல் இருக்கும் வர சித்தி விநாயகர் -சாந்தநாயகி அம்மன் உடனமர் சித்தலிங்கேஸ்வரர் -பாலமுருகன் கோவிலில் மூலவர் சித்தலிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த சிவபெருமான். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் அருளை பெற்றனர்.