புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா கோலாகலம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2023 10:07
புட்டபர்த்தி: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா, பகவான் சத்ய சாய்க்குப் பிடித்தமான பக்தி பாடல்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குரு பூர்ணிமா பௌர்ணமி அன்று, சந்திர மாதமான ஆஷாட மாதத்தில் (ஜூலை) குருவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகக் கொண்டாடப்படுகிறது. சந்திரனை மனதின் அதிபதி. கு என்றால் இருள், ரு என்றால் விரட்டுவது. குரு இருளை போக்குபவர். புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், குரு பூர்ணிமா விழா, ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக கொண்டாடப் படும். அதன்படி இன்று காலை 8:00 மணிக்கு வேதம்; 8:25 மணிக்கு குரு வந்தனம்; 9:00 மணிக்கு ஸ்ரீசத்யசாய் டிரஸ்ட் பற்றிய முன்னுரை, தொடர்ந்து, இந்திய ஸ்ரீசத்யசாய் சேவை தொண்டு நிறுவன தலைவர் துவக்க உரையாற்றினார். விழாவில் பகவான் சத்ய சாய்க்குப் பிடித்தமான பக்தி பாடல்களுடன் சிறப்பாக துவங்கியது. தொடர்ந்து பஜனை, சுவாமிக்கு பிடித்தமான பாடல்கள் பாடப்பட்டன. விழாவில் வயலின், மிருதங்க பக்தி இசைமழையில், பக்தர்கள் பரவசம் அடைந்தனர். பஜனையின் நிறைவில் மங்கல ஆரத்தி காட்டப்பட்டது. விழாவை முன்னிட்டு, நிகழ்ச்சிகள் நடக்கும் பிரசாந்தி நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. நிகழ்ச்சிகள் https://www.dinamalar.com/video_main.asp?news_id=5388&cat=live என்ற யுடியூப் முகவரியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.