சாத்துார் வெங்கடாஜலபதி கோயிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2023 03:07
சாத்துார்: சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நடந்தது.
சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனி திருவிழா கடந்த ஜூன் 25 கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் சுவாமி அன்ன வாகனம் பல்லக்கு சேஷ வாகனம் சிறிய கருட வாகனம் பெரிய கருட வாகனம் அனுமந்து வாகனங்களில் வீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 10 : 10 மணிக்கு துவங்கியது. வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தேரோட்டத்தை துவக்கி வைத்தார். நான்கு ரத வீதி வழியாக வலம் வந்த சுவாமி பகல் 12:55 மணிக்கு நிலையை வந்து அடைந்தது பக்தர்கள் கோவிந்தா கோபாலா என கோஷமிட்டு படம் பிடித்து இழுத்தனர். சடையம்பட்டி கிராமத்தினர் தேருக்கு தடி போட்டனர். டி.எஸ்.பி வினோ ஜி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்து சமய அறநிலை துறை சார்பில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.