காளஹஸ்தி சாய்பாபா கோயிலில் குரு பூர்ணிமா மஹோத்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2023 12:07
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் சத்தியவேடு அடுத்துள்ள சத்தியவேடு - ஸ்ரீகாளஹஸ்தி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீஷீரிடி சாய்பாபா கோயிலில் குரு பூர்ணிமா மஹோத்ஸவம் சிறப்பு பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குரு பூர்ணிமாவையொட்டி, பல்வேறு மலர்களால் ஷிரிடி சாய்பாபாவை அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் ஸ்ரீஷிரிடி சாய் சத்சங்க சேவா சமிதி சார்பில் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு ஸ்ரீஷீரிடி சாயிக்கு சிறப்பு பாலாபிஷேகம், 9 மணிக்கு திருமலை திருப்பதி சார்பில் அன்னமய்ய சங்கீர்த்தனங்கள் நடைபெற்றது.பகல் 12 மணிக்கு மகாஹாரத்தி, மாலை 3 மணிக்கு ஸ்ரீ வேணுகோபால சுவாமி குழுவினரின் கோலாட்ட பஜனை, மாலை ஏழு மணிக்கு சத்சங்கம், பஜனை, ஹாரதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக குரு பூர்ணிமா விழா நடந்தது.மேலும் சாயி சத்சங்க சேவா சமிதி அமைப்பாளர் வேணுகோபால் ரெட்டியின் மேற்பார்வையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான சாய் பக்தர்கள் ஷீரடி சாயியை தரிசித்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.மேலும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் ஆடிய கோலாட்டம் பக்தர்களை கவர்ந்தது.கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் சாய் சத்சங்க சேவா சமிதி செய்திருந்ததால் பக்தர்கள் சீராக சாய்பாபாவை தரிசித்தனர்.