திரிவேணி சங்கமத்தில் விஜேயேந்திரர் சாதுர்மாஸ்ய விரத பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2023 12:07
பிரயாக்ராஜ்: திரிவேணி சங்கமத்தில் ஸ்ரீ விஜேயேந்திரர் பூஜை செய்தார். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஆறு மாநிலங்களுக்கு விஜய யாத்திரை மேற்கொண்டு, காசியில் சாதுர்மாஸ்ய விரத சிறப்பு பூஜை வழிபாடு மேற்கொண்டு வருகிறார். முக்கிய நிகழ்வான, வியாச பூஜை மற்றும், சதுர்மாஸ்ய விரத பூஜைகளை துவக்கி வழிபட்டார். முன்னதாக, ரேவாவில் இருந்து பிரயாக்ராஜ் செல்லும் வழியில் பல இடங்களில் ஸ்வாகதம் பெற்று இரவு தாமதமாக பிரயாக்ராஜ் வந்தடைந்தார். சித்தேஷ்வர் மஹாதேவ் மந்திர் வரை அவரது புனிதர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவரது புனிதர் பூஜைகள் மற்றும் ஹாரத்திகளை செய்தார். பின்னர், திருவேணி சங்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஆதி சங்கரர் விமான மண்டபத்திற்கு வந்தார். தனுஷ்கோடியில் இருந்து எடுக்கப்பட்ட புனித மணல் சிவலிங்கம் வடிவில் படைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்தார்.