ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் சன்னதியின் சடகோபராமானுஜர் ஜீயர் சுவாமிகள் நேற்று முதல் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டுள்ளார்.
இதனை முன்னிட்டு நேற்று காலை வேத விற்பனர்கள் பாஸ்கர பட்டர் , பாபு பட்டர் தலைமையில் வேத மந்திரம் முழங்க ஆண்டாள் கோயிலில் துயர் சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்தார். நிகழ்ச்சியில் வாசுதேவப்பட்டர், விஸ்வ ஹிந்து பரிஷத் தென்பாரத அமைப்பாளர் சரவண கார்த்திக். பா. ஜனதா விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரைராஜா, ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் ராம்குமார் மற்றும் ஏராளமான சிஷ்யர்கள் பங்கேற்றனர். கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார தரிசனம் செய்த பின்னர் ஜீயர் சுவாமிகள் பக்தர்கள் அனைவருக்கும் மங்கள சாசனம் செய்தார். பிரதான பக்தர்கள் பங்கேற்றனர்.ஞ் சட்ட விரதத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஜீயர் சுவாமிகள் மங்கல சாசனம் செய்ய உள்ளார்.