பதிவு செய்த நாள்
05
ஜூலை
2023
12:07
சிவகிரி: வாசுதேவநல்லுார் சிந்தாமணிநாதர் கோயிலில் தெப்ப உற்சவம் நடந்தது. வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில், ஆனி திருவிழா கடந்த ஜூன் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், வீதியுலா உள்ளிட்டவை நடந்தன. நிறைவுநாள் நிகழ்ச்சியாக 10ம் திருவிழாவான நேற்று முன்தினம், காலை தீர்த்தவாரி நடந்தது. மாலையில் சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடந்தது. மண்டகப்படிததாரர்களான இல்லத்து பிள்ளைமார் சமுதாயம் சார்பில் அம்மையப்பருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகன சப்பரத்தில், அம்மையப்பர் எழுந்தருளினார். இரவு தெப்ப உற்சவம் நடந்தது. மண்டகப்படிதாரர் நாடார் உறவின்முறை சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. பின்பு அலங்கரிக்கப்பட் தெப்பத்தில், இரவு அம்மையப்பர் எழுந்தருளினார். தெப்பத்தேர் நீராளி மண்டபத்தை 11 முறை வலம் வந்தது. நிகழ்ச்சியில் எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தலைவர் தங்கப்பழம், செயலாளர் முருகேசன் மற்றும் குடும்பத்தினர்கள், கோயில் செயல் அலுவலர் கார்த்தி லட்சுமி, வாசுதேவநல்லுார் பஞ்., தலைவர் லாவண்யா, சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி தலைவர் தவமணி, நாடார் உறவின்முறை தலைவர் காசிராஜன், அனைத்து சமுதாய மண்டகப்படிதார்கள், உபயதாரர்கள், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், தக்கார் முருகன் தலைமையில், செயல் அலுவலர் கார்த்தி லட்சுமி செய்திருந்தார்.