கடினமான சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம். அன்று ஒருநாள். எதிரிகள் மதீனாவைத் தாக்க திட்டமிட்டிருந்தனர். அவர்களின் எண்ணிக்கையோ அதிகம். அதனால் மதீனாவைச் சுற்றி அகழ் தோண்ட வேண்டும் என மக்கள் முடிவெடுத்தனர். தோண்டும் போது பெரிய பாறை ஒன்று குறுக்கிட்டது. என்ன செய்வது என தெரியாமல் நபிகள் நாயகத்திடம் ஆலோசனை கேட்டனர். அதற்கு அவர், கடப்பாரையை ஒன்றை அந்தப்பாறை மீது ஓங்கி அடித்தவாறு, ரோம் நகரை நாம் வெற்றிகொள்ள போகிறோம் என்றார். இரண்டாவது முறை அடிக்கும்போது பாரசீகத்தை வெற்றிகொள்ளப் போகிறோம் என்றார். மூன்றாவது அடியில் பாறை உடைந்தது. இவ்வாறு தோழர்களின் உள்ளங்களில் நம்பிக்கையை விதைத்தார்.