பதிவு செய்த நாள்
14
ஜூலை
2023
05:07
திருப்புல்லாணி, திருப்புல்லாணியைச் சேர்ந்த ரகுபதி ஐயங்கார் கூறியதாவது;
சேதுக்கரை, தேவிபட்டினம், ராமேஸ்வரம், மாரியூர் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் தை, ஆடி, மாகாளய அமாவாசை தினங்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நடப்பு வருடத்தில் ஆடி அமாவாசை இருமுறை வருகிறது. ஆடி மாதம் 1ம் தேதி ஜூலை 17 திங்கட்கிழமை அன்று அமாவாசை சூன்ய திதியில் வருவதால் அது சாதாரண அமாவாசையாகவும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்த அமாவாசையை முன்னோர்கள் திதி, தீர்த்தம் நீராடுவதற்கு உகந்தது அல்ல என்பதாகும். அன்றைய தினத்தில் கடலில் குடும்ப வழக்கப்படி நீராடிக் கொள்ளலாம். ஆக., 16 ஆடி மாதம் 31ஆம் தேதி புதன்கிழமை ஆடி பெரிய அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள், பக்தர்கள் விரதம் இருந்து முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், திவசம், உள்ளிட்டவைகளை செய்து புனித நீராடல் செய்து கொள்வதற்கு உகந்த தினமாகும் என்றார்.