கோணப்பட்டி காளியம்மன் கோவில் மண்டல பூஜையில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2023 05:07
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கோணப்பட்டி காளியம்மன், பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை விழாவை தொடர்ந்து நடந்த திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி கடந்த மே 25 கோணப்பட்டி காளியம்மன், பகவதி அம்மன் கோவிலில் கும்பங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து 48வது நாள் மண்டல பூஜை நடந்தது. இதில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜைகளை மேட்டுக்கடை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தின் நிர்வாகி டாக்டர் திருவேங்கட ஜோதி ஐயர் நடத்தி வைத்தார். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோணப்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.