ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான ராமர் தீர்த்த குளம், கோயிலில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த தீர்த்த குளத்தில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடிய பின், கோயில் வளாகத்தில் உள்ள தீர்த்தங்களை நீராடுவது வழக்கமாக உள்ளது. இந்த தீர்த்த குளத்தை திருக்கோயில் நிர்வாகம் பராமரித்து வந்த நிலையில், காலபோக்கில் கண்டுகொள்ளாமல் விட்டது. இதனால் தீர்த்த குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தேங்கியும், பாசி படர்ந்து அசுத்தமாகி கிடக்கிறது. புனிதமான தீர்த்த குளத்தை கோயில் நிர்வாகம் பராமரிக்காமல் இருப்பதை கண்ட பக்தர்கள் அருவெருப்புடன் நீராடி செல்கின்றனர். இந்நிலை நீடித்தால் ராமர் தீர்த்தத்தின் புனிதம் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே தீர்த்த குளத்தை பராமரிக்க கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட வேண்டும்.