ரங்கா நீயே துணை; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கோபுரத்தில் விரிசல்.. பக்தர்கள் அச்சம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2023 02:07
திருச்சி; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 1 வது திவ்ய தேசம். ராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில். இந்தியாவில் உள்ள சில பிரம்மாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்று. மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க இக்கோவிலில் மொத்தம் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உள்ளன. இக்கோவிலில் கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் 2 நிலைகளில் மேற்கூரை பூச்சு இடிந்து விழும் நிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கோபுரம் வழியாக செல்லும் பக்தர்கள் அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது. சிறப்பு மிக்க இக்கோவிலை முறையாக பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.