அரசாள வந்த அம்மன் கோயில் விழாவில் முளைப்பாரி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2023 03:07
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக விழாவை முன்னிட்டு நேற்று மாலையில், பெண்கள் திரௌபதி அம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக பூத்தட்டுக்களுடன் சென்று அரசாள வந்த அம்மன் கோயிலை அடைந்தனர். தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்திருந்த பூக்கள் மூலம் மூலவர்கள் அரசாள வந்த அம்மன், துர்க்கை அம்மன் ஆகியோருக்கு மலர் அபிஷேகம் செய்யப்பட்டது. விரதம் இருந்த பக்தர்கள் முளைப்பாரி எடுத்து கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். விழாவில் இன்று காலை 9:30 மணிக்கு அரசாளவந்த அம்மன் கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பூவானிக்கரை கூ.கூ.விநாயகர் கோயிலில் முளைப்பாரிகளை வைத்து பெண்கள் கும்மியாட்டம் ஆடி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பின்பு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட முளைப்பாரிகளை அரசூரணி நீரில் கொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்தனர்.