பதிவு செய்த நாள்
31
ஜூலை
2023
10:07
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரை வழிபடுகின்றனர். இந்நிலையில் ஆடி மாத பவுர்ணமி திதி நாளை, (ஆக., 1, செவ்வாய்க்கிழமை) அதிகாலை, 1:25 மணிக்கு துவங்கி மறுநாள், 2-ம் தேதி (புதன்கிழமை) அதிகாலை, 1:05 மணி வரை உள்ளது. இது, பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
*திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பெளர்ணமி கிரிவலத்தை ஒட்டி, நாளை சென்னையில் இருந்து 30, திருப்பத்தூரில் இருந்து 30, வேலூரில் இருந்து 50, ஆற்காட்டில் இருந்து 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.